கோவை மே 15
கோவையை சேர்ந்தவர் பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் “கிங் ஜெனரேஷன்” கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நிறுவி மத போதகராக உள்ளார். கடந்த 2024 -ஆம் ஆண்டு மே – 21ஆம் தேதி தன் வீட்டில் நடந்த விருந்தின் போது 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜான் ஜெபராஜ் மீது காந்திபுரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் கோவையில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜைகைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார் .அதில் என் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என் மனைவியின் குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன். இதனால் ஜாமீன்வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் மனுதாரர் ஜான் ஜெபராஜ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.