கோவை மே 14 கோவை போத்தனூர் கணேசபுரம், ருக்மணி நகரை சேர்ந்தவர் முருகேசன் .இவரது மனைவி பிரேமா ( வயது 50) டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கடையிலிருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பிரேமா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து பிரேமா சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு. பைக் ஆசாமிகள் கைவரிசை .
