கோவை மே 14 கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி மலை இருக்கிறது. இதில் 7 மலைகளை கடந்து சென்றால் அங்கு சுயம்புலிங்க ஆண்டவர் வீற்றிருக்கிறார். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ,சிலுவத்தூர் பக்கம் உள்ள கம்பராம் பட்டியை சேர்ந்தவர்முருகன், இவர் 10-ம்வகுப்பு படிக்கும்.தனது மகன் விஷ்வா (வயது 15 )மற்றும் உறவினர்களுடன் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர்கள் புறப்பட்டு பூண்டி வெள்ளியங்கிரி கோவில் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவில் மலை ஏறினார்கள். 7-வது மலைக்குச் சென்றுவெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தனர். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அதிகாலையில் மலையில் இருந்து கீழே இறங்க தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் 3 -வது மலைக்கு வந்த போது விஷ்வாவுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அதை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். இருந்தபோதிலும் அவர் எழும்பவில்லை. உடனே இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைவாழ் மக்கள் மூலம் டோலி கட்டி தூக்கிக்கொண்டு கீழே வந்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் .அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பூண்டி வெள்ளியங்கிரி மலையில்பள்ளிக்கூட மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
