இதற்கு இந்தியா பொறுப்பான மற்றும் தகுந்த முறையில் பாதுகாப்பாக எதிர்வினையாற்றியுள்ளது. இன்று அதிகாலையில் தாக்குதல்கள் அதிகரித்தது” எனத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ராணுவ கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்தியாவின் இராணுவ தளங்களைத் தாக்க ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்தியா பல ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்தியது. இருப்பினும் பாகிஸ்தான் 26க்கும் மேற்பட்ட இடங்களில் வான் வழியாக ஊடுருவ முயன்றது, மேலும் அவர்கள் உதம்பூர், பூஜ், பதான்கோட், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்களில் உள்ள இந்திய உபகரணங்கள் சேதப்படுத்தினர்.
மேலும் இந்திய ராணுவ பணியாளர்களைத் தாக்கினர். பஞ்சாபின் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து அதிகாலை 01:40 மணிக்கு அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தினர். அதோடு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைக் கூட தாக்கினர்” எனத் தெரிவித்தார். மேலும் விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “இந்திய ஆயுதப் படைகள் விரைவான மற்றும் தகுந்த பதிலடியாக அடையாளம் காணப்பட்ட ராணுவ இலக்குகளில் மட்டுமே துல்லியமான தாக்குதலை மேற்கொண்டன.
இந்திய எஸ் – 400 பாதுகாப்பு அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாகவும் கூறி, பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தைச் செயல்படுத்த முயன்று வருகிறது. பாகிஸ்தான் பரப்பும் இந்தப் பொய்யான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.