புதுடெல்லி: ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இருப்பு உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போர் உச்சத்தை எட்டி உள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து சைபர் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வௌியாகி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஏடிஎம்கள் மூடப்படும் என்ற செய்திகள் உண்மையில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி உள்ளிட்ட வங்கிகள் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் போதிய அளவு பணம் இருப்பு உள்ளது. அனைத்து வங்கிகளின் ஏடிஎம்கள், சிடிஎம்கள், ஏடிடபிள்யூஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் சீராக இயங்குகின்றன. சரி பார்க்கப்படாத, உண்மையற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.