மே 12ல் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தேவஸ்தானம்.!!

மே 12ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில், மே 6ல் பட்டாபிஷேகமும், மே 7ம் தேதி திக் விஜயம், நேற்று மே 8ம் தேதி திருக்கல்யாணம் நடந்தேறியது.

இன்று மே 9ம் தேதி திருத்தோரோட்டம் உட்பட முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், பொதுமக்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்க அழகர் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி “இந்நிகழ்ச்சியின்போது பக்தர்கள் தண்ணீரை தோல் பையில் நிரப்பி அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் அடிக்கக் கூடாது.

வாசனை திரவியம், வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை உற்சவர் சிலை மீது பக்தர்கள் பீய்ச்சி அடிக்க வேண்டாம். விரதம் இருந்து ஐதீக முறையில் தண்ணீரை பீச்சி அடிக்க பக்தர்கள், பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.