சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் பாடத்தில் 135 மாணவ மாணவிகள் சென்டம் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 7,518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும் தேர்வெழுதினர். மேலும் 18,344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள் என மொத்தமாக தமிழகம் முழுவதும் 8,21,057 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
இந்நிலையில், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தாண்டு 95.3% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.2 லட்சம் பேர் எழுதிய நிலையில், 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் – 93.16%, மாணவிகள் – 96.70%. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசு பள்ளிகளில் – 91.94 % தேர்ச்சி. அரசு உதவிபெறும் பள்ளிகள் – 95.71 %, தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.88 % தேர்ச்சி ஆகும். அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் தேர்ச்சியுடன் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
பிளஸ் 2 மாணவர்கள் https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/
இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து சொள்ளலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 26,887 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,853.
தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 3,181 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
கணித பாடத்தில் 3,022 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
இயற்பியல் பாடத்தில், 1,125 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
உயிரியல் பாடத்தில் 827 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,240 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வணிகவியல் பாடத்தில் 1,624 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4,208 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.