சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு மக்கள் சுகாதாரம் காக்க மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “எல்லா பல்கலைக்கழகங்களும் இணைந்து முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தியதாக சேகர்பாபு சொல்கிறார். எல்லா பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பாராட்டு விழா நடத்த கட்டாயப்படுத்தப்பட்டன.
பல்கலைக்கழகங்கள் தலைமை கழகமாக மாறாது என்பதில் என்ன நிச்சயம்?. தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிராக முதல் கையெழுத்தை போடுவோம் என்றார்கள். பிறகு கோடி கையெழுத்து வாங்கினார்கள். இப்பொழுது எங்களால் முடியாது பாஜக, அதிமுக நினைத்தான் தான் நீட்டை எடுக்க முடியும் என்று சரண்டர் ஆகி விட்டார்கள். அதிமுக பாஜக பலம் பொருந்திய கட்சிகளாக மாறி வருவதை அமைச்சர் மா சுப்பிரமணியனை ஒப்புக்கொண்டு விட்டார். அதிமுக, பாஜக நினைத்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும் என திமுக சரண்டர் ஆகிவிட்டது.
நீட் தேர்வின் போது மாணவர்களை துன்புறுத்தக் கூடாது, கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பட்டனை கழட்ட வேண்டும்; சட்டையை மாற்ற வேண்டும் என கூறிய தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் மீது தவறில்லை.. அந்த தேர்வை நடைமுறைப்படுத்தும் பொழுது வேண்டுமென்றே கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று செயல்களில் ஈடுபடுகிறார்கள். பட்டனை கழட்டவும், வேறு சாட்டையை போடவும் எதிலும் கூறவில்லை. தமிழகத்தில் எல்லாமே விளம்பரமாக இருந்து கொண்டிருக்கிறது, பாஜக – அதிமுக கூட்டணி அழுத்தத்தினால் ஏற்பட்ட கூட்டணி என்று சொல்கிறார்கள்.தமிழகத்தில் இலையின் மீது தாமரை மலரும், அதைபோலதான் ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும், அப்படி மலரும்போதுதான் நாம் எல்லாம் இலைபோட்டு சரியாக சாப்பிட முடியும்” என்றார்.