கோவை மே 5 கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகன் மோகனகிருஷ்ணன் ( வயது 35) இவர் கடந்த 28-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவாவுக்கு சுற்றுலாசென்று இரு ந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.40, ஆயிரம் ரொக்க பணம், 3 வெள்ளிக்காசுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது .இது குறித்து மோகனகிருஷ்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுற்றுலா சென்றவர்வீட்டில் பூட்டை உடைத்து 34 பவுன் நகை – பணம்கொள்ளை.
