கோவை துடியலூர் , வடமதுரைஅருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையம், ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி அபிராமி ( வயது 49) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 50ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அபிராமி துடியலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!








