கடைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் திருட்டு..!

கோவை சுண்டப்பாளையம், வீரமாஸ்தி கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது65 ) நேற்று இவர் கடைவீதியில் மளிகை சாமான்கள் வாங்க அரசு டவுன் பஸ்சில் டவுன்ஹால் வந்து கொண்டிருந்தார். லாலா கார்னர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஒப்பணக்கார வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணவில்லை. பஸ்சில் வைத்து யாரோ திருடிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..