கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜி. எம். நகரை சேர்ந்தவர் பாதுஷா. இவரது மனைவி சாபனா (வயது 32) இவரிடம் ஆர். எஸ். புரம், சாமு காலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 39 )என்பவர் ரூ 4 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம் அதை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். சம்பவத்தன்று ஒப்பணக்காரர வீதி பிரகாசம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த சண்முக சுந்தரத்திடம், சாபனா அந்த பணத்தை கேட்டார். அவர் சாபனாவை கெட்ட வார்த்தைகளால் பேசி,தாக்கி கீழே தள்ளி ,கொலை மிரட்டல் விடுத்ததாக கூறிப்படுகிறது. இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கைது செய்தார்.. இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தாக்குதல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
4 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஒருவர் கைது..!
