கோவை : நீலகிரி மாவட்டம் தெங்குமாறடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சிவக்குமார் ( வயது 40 ) இவர் நேற்று கோவை காந்திபுரம் வந்திருந்தார். காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு தனியார் டவுன் பஸ் பின்னோக்கி வந்தது. இதனால் ஒட முடியாமல் அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சுக்கும், பின்னோக்கி வந்த பஸ்சுக்கும் இடையில் சிவகுமார் சிக்கிக் கொண்டார். படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.. இதுகுறித்து அவரது தாயார் சரோஜா கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பட்டணம், பசும்பொன் நகரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் திருநாவுக்கரசு (வயது 38) என்பவரை கைது செய்தார். இவர் குடிபோதையில் பஸ் ஓட்டியது விசாரணையில் தெரிய வந்தது .இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது..
குடிபோதையில் டிரைவ்… 2 பஸ்களுக்கு இடையில் சிக்கி ஒருவர் பலி.. டிரைவரை தாக்கிய சக ஓட்டுனர்கள்.!!









