கோவை பீளமேடு புதூர், மறைமலை அடிகளார் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி . இவரது மகன் நிதிஷ் குமார் ( வயது 22) இவரும் உடையாம்பாளையம் காமராஜர் காலனி சேர்ந்த செல்வ பெருமாள் (வயது 24) என்பவரும் நண்பர்கள் . இவர்கள் இருவரும் நேற்று சவுரிபாளையம் ரோட்டில் உள்ள நூலகம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேருக்கும், இவர்களுக்கும் இடையே வழி விடுவதில் தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து நிதீஷ் , செல்வ பெருமாள் ஆகியோரை கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினார்கள். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிதீஷ் குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிவு செய்து பூபதி, வேல்ராஜ் மற்றும் ஒருவரை தேடி வருகிறார். இவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
கோவையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு – 3 பேருக்கு வலை.!!








