சென்னை : தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினாரால் கடந்த இரண்டு தினங்களில் ஸ்பெஷல் ரெய்டு நடத்தப்பட்டு மூன்று வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு சுவாமி சிலைகள் 1 திருவாச்சி ஆகியன மீட்கப்பட்டன. திருநெல்வேலி சரகம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை மாவட்டம் விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள பிலோமின் ராஜ் என்பது வீட்டை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் விநாயகர் சிலை கைப்பற்றப்பட்டது. இந்த சிலை விளாங்குடி விசாலாட்சி மில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருடபட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 1. பிலோமின் ராஜ் 2. ஜோசப் கென்னடி 3.டேவிட் 4. அன்பு ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் திண்டுக்கல் சரகம் சிலையை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் போலீஸ் இன்ஸ்பெக்டர் புதுக்கோட்டை ஆலத்தூர் சந்திப்பில் போலிஸ் குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது மின்னல் வேகத்தில் வந்த டூ வீலர் பஜாஜ் பல்சர் t n 55 bw 1121 என்ற வண்டியை சோதனை செய்த போது பழமையான அம்மன் சிலை கண்டெடுத்தனர். இந்த சிலை மீட்கப்பட்டது . குற்றவாளிகள் 1. காரைக்குடி அஜித் 2. கோவில்பட்டி ஸ்ரீராம் 3 விருதுநகர் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சரகம் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விழுப்புரம் புலிச்ச பள்ளம் என்ற இடத்தில் செல்வகுமார் என்பவரது வீட்டை சோதனை இட்டனர். சோதனையில் மூன்று பெருமாள் உலோக சிலைகள் ஒரு அனுமன் சிலை ராமர் மற்றும் லட்சுமணரை தோளில் ஏந்திய சிலை மற்றும் ஒரு திருவாச்சியை கைப்பற்றினர் . கேடிகள் 1. பாரதிதாசன் 2. நிசார் 3. அகஸ்டின் 4. முத்து ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர் . இது தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் விசாரணை நடந்து வருகிறது..