புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளைப் பிரதமர் மோடி நேற்று வழங்கினார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள், ஆயுதப்படை, பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கும் மெகா திட்டத்தைப் பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி, பல்வேறு மாநிலங்களில் மத்தியஅரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், ஒன்றரை மடங்கு அதிகமாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பகடந்த 10 ஆண்டுக்கு முன்பிருந்தகாங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தியது. இது ஊழலுக்கு வழிவகுத்தது. ஆனால், பாஜக ஆட்சியில்பணி நியமனங்கள் வெளிப்படையாகவும், குறித்த நேரத்திலும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
தற்போது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. திறமை மற்றும் கடினஉழைப்பின் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் என்றுஅவர்கள் நம்புகின்றனர். ஒரு கோடிமாடிகளில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்தும் போதும்நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் உள்கட்ட மைப்புப் பணிகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இளைஞர்கள் புதிய நிறுவனங்களை சிறிய நகரங்களில் தொடங்கி வருகின்றனர். இந்நிறுவனங்களும் பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இதை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை வழங்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.