கோவை செல்வபுரம் ,வடக்கு அவுசிஙயூனிட்டை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 70 )இவர் நேற்று அவரது வீட்டில்குளியல் அறையில் வாட்டர் ஹிட்டரை வாளிக்குள் போட்டு சூடு செய்தார்.தண்ணீர்சூடாகி விட்டதா? என்று தொட்டுப் பார்த்தார். அப்போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளியல் அறையில்மின்சாரம் தாக்கி முதியவர் சாவு…









