தேனி மாவட்டம் உத்தமபாளையம் , பண்ணை புரம், பக்கம் உள்ளபல்லவ ராயன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன்,இவரது மகன் சக்திவேல்( வயது 19) கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு பீளமேட்டில்நவ இந்தியா பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கிவிடுதிக்கு நடந்து சென்றார். அப்போது ஒரு பைக்கில் வந்த 3 ஆசாமிகள் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் அவர் வைத்திருந்த பை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து சக்திவேல் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு.









