கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் நாரணாபுரம்,சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் சைமன்,இவரது மகன் சிந்துராஜ் (வயது 31) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு பணக்கஷ்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை சைமன் அன்னூர் போலீசில் புகார் செய்தார்..
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை..








