கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65) இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவை மத்திய சிறையில் வார்டனாக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நீரழிவு, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 9-ந்தேதி விஷம் குடித்தார்.இவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி பிரேமா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற கோவை மத்திய சிறை வார்டன் விஷம் குடித்து தற்கொலை..









