டெல்லி மாநகராட்சி தேர்தல் – ஆம் ஆத்மி முன்னிலை..!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 43 வார்டுகளிலும், பாஜக 36 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4ம் தேதி அன்று நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மும்முனை போட்டி இருந்த நிலையில் 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 43 வார்டுகளிலும், பாஜக 36 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.

கடந்த தேர்தலில் பாஜக தான் மாநகராட்சியை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.