3 மாவட்டங்களில் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் – பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

டலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.6) நடைபெறவிருந்த ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்.2-ஆம் தேதி அணிவகுப்பு நடத்த காவல் துறையிடம் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த மாதம் உயா்நீதிமன்றத்தை அணுகியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இதையடுத்து சட்டம்-ஒழுங்கு காரணத்தால் நவ.6-ஆம் தேதி உள் அரங்கு அல்லது நான்கு சுவா்களுக்குள் அணிவகுப்பை நடத்தும்படி நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையும் படிக்க | குடும்ப உறவு, பந்த பாசங்களை முற்றிலும் துறக்கிறேன்: உமா பாரதி அறிவிப்பு! இந்த நிலையில், அணிவகுப்பை உள் அரங்கு அல்லது நான்கு சுவா்களுக்குள் நடத்தும்படி கூறியிருப்பது ஏற்புடையதல்ல.

எனவே, சட்ட ரீதியாக இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவ.6-ஆம் தேதி அணிவகுப்பு நடத்த இயலாது எனவும், 3 மாவட்டங்களில் மட்டும் அணிவகுப்பு நடத்தப்படும் என ஆா்.எஸ்.எஸ். சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

கைகளில் காவிக் கொடி ஏந்திய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதையடுத்து முன்னச்செரிக்கை நடவடிக்கையாக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அணிவகுப்பு முன்னதாக உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.