இந்தி திணிக்கப்படவில்லை.. திராவிடர்கள் எங்கும் தமிழை வளர்க்க வில்லை.. கோவையில் நடிகை காயத்ரி ரகுராமன் பேச்சு..!

கோவை:
பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார் அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக இருந்து படித்த இளைஞர்கள் வேலைக்காக தவறுதலான வழிகாட்டுதலினால் போலி விசாவைக் கொண்டு வெளிநாடு சென்று சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் வழி நடத்தப்படுகிறார்கள் எனவே வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தீவிர சட்டங்களை தமிழக அரசு இயற்றப்பட வேண்டும். சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு இவ்வாறு வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட இளைஞர்களை மீட்டு இந்திய அழைப்பு வந்துள்ளது. பிலிப்பைன்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு தமிழைப் போற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது. தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிக அளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
திராவிடர்கள் தமிழை எங்கு வளர்க்கவில்லை, ஆங்கிலத்தை மட்டுமே வளர்த்து உள்ளனர்.இந்தி எங்கும் திணிக்கப்படவில்லை. தமிழை வளர்க்க விடாமல் செய்து வருகின்றனர். ஆங்கில கல்விக்கூடங்கள் தான் தமிழகத்தில் பெருகி உள்ளது.
பின்னர் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998-ம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது போல ட்விட்டரில் பதிவு செய்துள்ளீர்கள் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அதுபோன்ற பதட்டமான நிலையை உருவாக்க நான் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு நீங்கள் தான் பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் என கூறினார். இதனால நிருபர்களுக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் நிருபர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.