உச்சகட்ட போர் பதற்றத்தில் தைவான்: சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா, கனடா போர் கப்பல்கள்..!!

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிக்கின்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் போர் கப்பல்கள் தைவானின் நீரினை பகுதியை கடந்து சென்றது.

இந்த நடவடிக்கை இந்தோ-பசிபிக் பகுதியில் உலகளாவிய ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான வழக்கமான நடவடிக்கை என்று அமெரிக்கா மற்றும் கனடா ராணுவம் தெரிவித்துள்ளன.

ஆனால் இது ஒரு ஆத்திரம் மூட்டும் தேவையில்லாத செயல் என்று அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் தைவான், சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை தவிர்க்க முடியாது என்றும், தைவானை அமைதியான முறையில் அடைவதற்கான அனைத்து முயற்சிகளும் ஊக்குவிக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.