விசா இல்லாமலே ரஷ்யா பயணிக்கலாம்.. இந்தியர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் சூப்பர் அறிவிப்பு.!

பொதுவாக விடுமுறை நாட்களை ஜாலியாக கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு நாம் செல்வது வழக்கம். அப்படி பயணப்படும் நாம் தமிழகத்திற்குள் மற்றும் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால், வெளிநாடுகளுக்கு செல்ல விசா கண்டிப்பாக தேவை.

இந்த விசாக்களைப் பெற நாம் செல்லும் நாடுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் அந்த நாட்டிற்குச் சென்ற பின்னர் விசா எடுக்கலாம் என்ற அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவிற்கு 87வது இடம் கிடைத்துள்ளது.

மொத்தம் 199 நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசையில் முதல் இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன் படி இந்த இரு நாட்டு பாஸ்போர்ட் கொண்டு 192 நாடுகளுக்குச் செல்லலாம்.

தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், முக்கிய நாடுகளான அமெரிக்கா 7வது இடத்திலும், ரஷ்யா 50வது இடத்தையும், சீனா 69வது இடத்திலும் உள்ளது. மேலும் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதியை வழங்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ஆதரவை தற்போது தெரிவித்துள்ளார். சமர்கண்டில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது புடின் இந்த திட்டத்தை முன்வைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலியுறுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.ரஷ்ய அதிபர் புடின், ‘விசா இல்லாத சுற்றுலா பயணத்திற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை விரைவுபடுத்த நாங்கள் இதை முன்மொழிகிறோம்’ என்று கூறினார். எனவே விரைவில் இனி ரஷ்யாவிற்கு விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்யலாம்.