கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 43) வியாபாரி. இவரது மகன் வருண் (வயது 13 ) அன்னூர் -கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நடந்த அரையாண்டு தேர்வில் வருண் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனை பெற்றோர்களிடம் சொல்லாமல் இருந்தால் இதற்கிடையில் நேற்று முன்தினம் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. அப்போது வருண் அரையாண்டு தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததை அவரது தாயாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர் .இதனால் வருணை அவரது தாயார் கண்டித்தார். பின்னர் அவரைப் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு தந்தை குணசேகரன் வந்தார் . அப்போது வருண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை..









