டாஸ்மாக் பாரில் கள்ள சந்தையில் மது விற்ற 7பேர் கைது. 1131 பாட்டில்கள் பறிமுதல் .

கோவை மே 2தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதை மீறி நகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுகோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது வெள்ளலூர் ரோடு டாஸ்மாக் கடை ( எண் 1763)தென்னந்தோப்பு பாரில் சட்ட விரோதமாக மது விற்றதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மதி பாலன் ( வயது 23 )கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 532 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல வடகோவை மேட்டுப்பாளையம் ரோடு ரங்கநாதபுரம்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துஅதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜ் ( வயது 35 )கைது செய்யப்பட்டார் .இவரிடமிருந்து38 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. போத்தனூர் காந்திஜி ரோடு சுடுகாடு பகுதியில் கள்ள சந்தையில் மது விற்றதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (வயது 25) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 300 மது பாட்டில்களும், ஒரு இருசக்கர வாகனமும் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 320 பணமும்கைப்பற்றப்பட்டது. கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்றதாக கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ( வயது 29) கைது செய்யப்பட்டார். 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் சேரன் மாநகர் வினோபாஜி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்றதாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த கணேசன் ( வயது 36) என்பவரை கைது செய்தனர் இவரிடம் இருந்து 163 மது பாட்டில்களும் மது விற்ற பணம் 3, 430 பறிமுதல் செய்யப்பட்டது.சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வி சின்ன மேட்டுப்பாளையம் பட்டாத்தரசி அம்மன் கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது சட்ட விரோதமாக மது விற்றதாக சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் (வயது 60 )கைது செய்யப்பட்டார். 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சிவானந்தபுரத்தில் கள்ள சந்தையில் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன் ( வயது 39)கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது..