கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தில் உள்ள 11 பதவிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது . இதில் இரு அணிகளாக வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். இதில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் பாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் தலைவர் கே. எம். தண்டபாணி போட்டியிடுகிறார். அவர்கள் தங்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். இந்த நிலையில் கோவை கோர்ட்டு வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4:30 மணி வரை நடந்தது. கோவை வக்கீல்கள் சங்கத்தில் மொத்தம் 3,326 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் .இதில் 2,306 பேர் வாக்களித்தனர். இது 69 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பட்டிகள் சீல் வைக்கப்பட்டு வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று ( வெள்ளி) காலை 10 மணிக்கு தொடங்கியது.மதியம் 2 மணிக்கு மேல் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரியவரும்.
கோவை வக்கீல்கள் சங்க தேர்தலில் 69 சதவீதம் வாக்குப்பதிவு – இன்று வாக்கு எண்ணிக்கை..!
