கோவை : தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம் )ஈடுபட உள்ளார்கள் .துணை இராணுவத்தினர் (சி.ஆர். பி.எப்) இன்றும் வருகிற 7-ந் தேதி பல்வேறு பிரிவுகளாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.அதன்படி கோவை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட 5 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ரயில் மூலம் காலை 11:30 மணிக்கு கோவை வந்தார்கள். அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றார்கள்.இவர்களுக்காக கோவையில் தங்குமிடம் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 5 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவை பொள்ளாச்சி தொகுதிகளுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினார்கள்..
Leave a Reply