கோவை மே 17 கோவையில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:- கோவையில் ரெயிலில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .அது போன்று தண்டவாளத்தில் கற்கள் வைப்பதை தடுக்கவும் தீர்வு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ரெயிலில் அடிபட்டு 48 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 41 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது .7 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியவில்லை. எனவே அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் ?என்று குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர உயிரிழந்த 48 பேரில் 39 பேர் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு பலியானவர்கள் .எனவே தண்டவாளத்தை கடக்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனவே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் .அத்துடன் தண்டவாளத்தில் கற்களை வைக்கக்கூடாது. குடியிருப்பு பகுதியில் தண்டவாளத்தில் பொதுமக்கள் செல்வதை தடுக்க வேலிஅமைப்பது .குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோவையில் 4 மாதங்களில் ரெயிலில் சிக்கி 48 பேர் உயிரிழப்பு.
