மருதமலை முருகன் கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல தடை.!!

அருள்மிகு மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) முதல் 18 – ந் தேதி வரை பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையாக இருப்பதால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் அல்லது கோவில் பஸ்கள் மூலம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் .இவர் அதில் கூறப்பட்டுள்ளது.