ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை .

கோவை மே 14கோவை உக்கடம் ,புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முனிசாமி ( வயது 80) இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் வெண்ணிலா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இதேபோல ஆர் .எஸ் . புரம், சண்முகா ரோட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 59 )இவர் ரத்த அழுத்தநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் வேட்டியை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்த ஆர் .எஸ் . புரம். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இதேபோல கணபதி, காமராஜர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் அஜித் (வயது 25 )இவர் குடும்பத்தகராறு காரணமாக அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி கவுரி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..