கோவை மாவட்டம்கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்குவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி (27), குமார் மகன் சக்திவேல் (26) மற்றும் முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி நபர்கள்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply