பொது இடத்தில் புகை பிடித்த 3 பேர் கைது.

கோவை மே 12

கோவை சாய்பாபா காலனி போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேற்று என்.எஸ்.ஆர். ரோடு 8 – வது கிராசில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடை அருகே பொது இடத்தில் நின்று கொண்டுபுகை பிடித்ததாக  சீரநாயக்கன்பாளையம் ,ஜெகதீஷ் நகரை சேர்ந்த ஆண்டியப்பன் ( வயது 67 )கைது செய்யப்பட்டார் .இதே போல வேலாண்டிபாளையம் ,தடாகம் ரோட்டில் உள்ள ஒரு கடை முன் நின்று புகை பிடித்ததாக வேலாண்டிபாளையம் அய்யா கோனார் வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 62) கைது செய்யப்பட்டார்.அதேபோல பி .என். புதூர் பகுதியில் ஒரு டீக்கடை அருகே பொது இடத்தில் புகை பிடித்ததாக வடவள்ளி மகாராணி அவென்யூ சேர்ந்த ஜெகன் (வயது 42) கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.