தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறார். ஆனால் அவர் முழு வீச்சில் மக்கள் பரப்புரையை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
விஜய்க்கு ரோட் ஷோ நடத்த அனுமதி இல்லை எனவும் நீதிமன்றம் மறுத்து இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் கரூர் சம்பவங்களுக்கு இரண்டு மாதம் கழித்து தமிழக வெற்றிக் கழகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போதுதான் விஜய் ஆங்காங்கே மக்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடைசியாக தஞ்சாவூரில் மக்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே இந்த சூழலில் விஜய் எவ்வாறு மீதம் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் சமயத்தில் மிக முக்கியமானது பிரச்சாரங்கள் தான் ஆனால் விஜய் அதை செய்ய தவறுகிறார் என்ற பெரும் விமர்சனம் அவர் மீது எழுகிறது. ஆனால் ஏற்கனவே நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் விடுபட்ட மாவட்டங்களை தான் முதல்வரான பிறகு வந்த சந்திப்பேன் என பேசியிருந்தது, விமர்சனமாக இருந்தது. இந்த சூழலில் விஜய் என்ன மாதிரியான நிலைப்பாட்டில் தனது பிரச்சார பயணத்தை வடிவமைப்பார் என்று கேள்வி எழுந்திருக்கிறது.







