கோவையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சோமையம்பாளையம் விஜயகாந்த் (36) கோட்டைமேடு முகமது நூர் அலாம் ( 29) என் .எச். ரோடு பாலசுப்பிரமணியன் ( 61) வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு ராவின் (18 ) சுண்ட பாளையம் நாராயணசாமி ( 56 )கணுவாய் சக்திவேல் ( 35 ) ஜெயக்கொடி ( 70 ) காந்திபுரம் 2 -வது வீதி பாரதிராஜா,100 அடி ரோடு ராஜா ( 54 )ரத்தினபுரி ராஜன் (60) உடையாம்பாளையம் பூந்தோட்டம் சுரேந்திர பிரகாஷ் 26) இராமநாதபுரம் 80 அடி ரோடு மனோகரன் (67) தெலுங்குபாளையம் சந்திரசேகரன் (42 ) சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோடு,காமராஜர் நகர் மல்லிகா ( 54) கரும்புக்கடை, பூங்கா நகர் சலீம் (56 )சிங்கநல்லூர் காமராஜர் ரோடு விஜயகுமார் ( 27 ) இருகூர் ஏ.ஜி.புதூர் கருப்பையா (39) ஆனியங்காடு ரோடு விஜய் (22)சிங்காநல்லூர் ஹரிஹரன் (21 ) சந்துரு (21) பீளமேடு நேரு நகர் தனபால் (52 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சஇவர்களிடமிருந்து ஏராளமான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ( குட்கா ) பறிமுதல் செய்யப்பட்டது..
பெண் உள்பட 22 வியாபாரிகள் கைது..!








