சுடு தண்ணீர் கொட்டி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்…

கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மொபைல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சர்வவேந்தன் (வயது 2½). சம்பவத்தன்று மணிகண்டன் குளிப்பதற்காக வெண்ணீர் வைத்தார். பின்னர் அதனை குளியல் அறைக்கு வைத்து விட்டு துண்டு எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சர்வவேந்தன் வெண்ணீர் இருந்த வாளியை தட்டி விட்டார். அவரது உடலில் வெண்ணீர் கொட்டியது. இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.