டாஸ்மாக் கடையில் கள்ள சந்தையில் மது விற்ற 2 ஊழியர் கைது .

கோவை மே 8 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கடையை மூடிய பிறகு பதுக்கி வைத்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கணேசன் ( வயது 38) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 147 மது பாட்டில்களும், மது விற்ற பணம் ரூ.3,540 பறிமுதல் செய்யப்பட்டது .இதே போலகணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைய அருகே இரவில்திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில்அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி ( வயது 47) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 168 மது பாட்டில்களும் , மது விற்ற பணம் ரூ 3,590 பறிமுதல் செய்யப்பட்டது.