2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள்- விஜய்யின் இலக்கு

2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதில் 2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர் என்ற இலக்கை விஜய் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. அதில் குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற இலக்கை அவர் நிர்ணயம் செய்திருக்கிறார். அதை நோக்கி நிர்வாகிகள் பயணிக்க வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார். நிர்வாகிகள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று ஆன்லைன் மூலமாக உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.