கோவை அருகே காரில் கடத்தி வந்த 1400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் . 2பேர் கைது.

கோவை மே 13 கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் விற்பனைக்குகடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையின‌ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் காளப்பட்டி நால்ரோடு ரவுண்டானா அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்தவழியாக வந்த ” சைலோ “காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா ) இருந்தது தெரிய வந்தது.இதை கடத்தி வந்த தென்காசிமாவட்டம் சுரண்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (45)தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சிலுவை அந்தோணி மகன் அந்தோணி ஞானப்பிரதீஷ் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த விற்பனைக்காக வைத்திருந்த 1400 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 2பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.