கோவையில் தடையை மீறி மது விற்ற 14 பேர் கைது – 1052 பாட்டில்கள் பறிமுதல்..!

திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.தடையை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீசார் நேற்று மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் மேடு பகுதியில் கடை ( எண் 16 11) அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் ( வயது 26) ராஜமுருகன் ( வயது 21) கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சஜினி (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 73 மதுபாட்டில்களும் பணம் ரூ.9,390 பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல ரத்தினபுரி சங்கனூர் ரோட்டில் உள்ள காமாட்சி நகரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில்விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சாம் குமார் ( வயது 38) கைது செய்யப்பட்டார். 549 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது ராமநாதபுரம் பங்கஜாமில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை (எண்1056)அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வீதியைச் சேர்ந்த குணா (வயது 29) கைது செய்யப்பட்டார்.119 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.செல்வபுரம் ,பேரூர் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் வேலு (வயது 49)கைது செய்யப்பட்டார் .53 மது பாட்டில்களும், பணம் ரூ 600 பறிமுதல் செய்யப்பட்டது. சிங்காநல்லூர்,இருகூர் ,ஏ .ஜி. புதூர் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்ற ஆவுடையார் கோவில் காளிமுத்து (வயது 29) லட்சுமணன் (வயது 26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒண்டிப்புதூர் மேம்பாலத்துக்கு அடியில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 16 65) அருகே கள்ள சந்தையில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல் குடியைச் சேர்ந்த மனோஜ் ( 35) கைது செய்யப்பட்டார்.92 மது பாட்டில்களும் ரூ19,170 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.வடவள்ளி ,சிறுவாணி ரோட்டில், தண்ணீர் டேங்க் அருகே மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த கிருஷ்ணன் ( வயது 42) கைது செய்யப்பட்டார். 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியில் மது விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 44) கைது செய்யப்பட்டார் 18 மதுபாட்டிக்கள் கைப்பற்றப்பட்டது. பீளமேடு பகுதியில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் காளிதாஸ் ( வயது 48) கைது செய்யப்பட்டார் 76 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது சரவணம்பட்டி எப். சி. ஐ .குடோன் கேட் அருகே கள்ள சந்தையில் மது விற்றதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ( வயது 33 )கைது செய்யப்பட்டார். 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.