ரயில்வே இன்ஜினியர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை..!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகர் 2-வது வீதியில் வசிப்பவர் சுகுமார் ( வயது 47) ரயில்வேயில் சீனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23.ஆம் தேதி வீட்டை  பூட்டிவிட்டு குடும்பத்துடன் அவரது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டார்.. திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து இன்ஜினியர் சுகுமார் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.