13 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- இரும்புக் கடை உரிமையாளர் போக்ஸோவில் கைது..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் கனகமணி(வயது 58) என்பவர் மாணவியை அழைத்தார்.

சிறுமி சென்றதும் அவரை கனகமணி இரும்பு கடைக்கு உள்ளே அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். பின்னர் அவரிடம் இருந்து தப்பிய மாணவி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் 8-ம் வகுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இரும்பு கடை உரிமையாளர் கனகமணியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.