கோவை மாநகர பகுதிகளில் ஆயுத பூஜையை யொட்டி ஒரே நாளில் 1,250 டன் குப்பைகள் குவிந்தது. அவைகள் மாநகராட்சி ஆணையர் சிவகுரு. பிரபாகரன் உத்தரவின் பேரில் 2,500 தூய்மை பணியாளர்கள் மின்னல் வேகத்தில் அகற்றினார்கள். நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கோவை மாநகரில் வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடினர். நுழைவு வாயில்களில் வாழக்கன்று, பூ மாலை அலங்காரங்கள் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர் .இது போன்று வீடுகளிலும் வழிபாடு நடைபெற்றது. பூஜைகள் முடிந்து நேற்று வாழைக்கன்றுகள் ( பூ மாலை அலங்காரங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். மேலும் பூஜை பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டன அவற்றை சிலர் சாலை ஒரங்களில் கொட்டி சென்றனர். இதனால் மாநகர பகுதியில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.இந்த குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2,500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர் வழக்கத்தை விட கூடுதலாக 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது நேற்று ஒரே நாளில் 1,250 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
ஆயுத பூஜையை முன்னிட்டு ஒரே நாளில் 1,250 டன் குவிந்த குப்பைகள்- மின்னல் வேகத்தில் அகற்றிய 2,500 தூய்மை பணியாளர்கள்..!
