12 வயது மாணவி கர்ப்பம். போக்சோவில் வாலிபர் கைது.

கோவை மே 2 கோவையை சேர்ந்தவர் 12 வயது சிறுமி . இவர்கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அவருடைய நெருங்கிய உறவினரான 20 வயதான வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த மாணவியின் உடல்நிலையில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது .இதை அறிந்த பெற்றோர் அந்த மாணவியிடம் கேட்டனர் .அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் பெற்றோர் விடாமல் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர் .அதில் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் ?என்று கேட்டு விசாரித்தனர். அப்போது அந்த மாணவியின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்குஅடிக்கடி வந்து சென்றதாகவும், வீட்டில் யாரும் இல்லாத போது அவர் பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காட்டூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இது இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மாணவியின் நெருங்கிய உறவினரான வாலிபர் ஒருவர் கடந்த ஓராண்டரகஅந்த மாணவியை பலாத்காரம் செய்து வந்ததும், அதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.