கோயமுத்தூர் மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி மாவட்ட நூலக வார விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிகழ்வு பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் அரிமா பி.எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினராக பதிவு கட்டணம் ஒருவருக்கு 25 ரூபாய் விதம் ஆயிரம் பள்ளி மாணவர் மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவரும் 324 அரிமா மாவட்டத்தின் துணை ஆளுநர் அரிமா பி.எஸ். செல்வராஜ் ரூபாய் 25 ஆயிரத்தை மாணவ மாணவிகள் சார்பில் பள்ளபாளையம் துணை நூலக அலுவலர் டெய்சி அவரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் நூலகப் புரவலர்கள் கலந்து கொண்டனர்..