- பவானி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் சாவு -கோவை மே கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் பிராங்கின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஆர்த்தோ பேட்டிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று விடுமுறை என்பதால் பிராங்கிளின் தனது நண்பர்கள் கார்த்திகேயன்,கிங்ஸிலே, விக்டர் ,பிரின்சி ஆகியோருடன் மேட்டுப்பாளையம் அருகே விளாமரத்தூர் பகுதிக்கு குளிக்க சென்றனர். அவர்கள் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிராங்கிளின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால்நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி இருந்த பிராங்கிளின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காகமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது .இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் சாவு -கோ no









