கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் உத்தவிற்கிணங்க இரண்டாவது நாளான நேற்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி ஆலோசனையின் பேரில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் துணை ஆட்சியர் நிறைமதி முன்னிலையில் வால்பாறை நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது இம்முகாமில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வால்பாறை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், வட்டாட்சியர் வாசுதேவன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் விறுவிறுப்பாக நடைபெற்ற இம்முகாமில் சுமார் 13 துறைசார்ந்த அதிகாரிகளிடம் மொத்தம் 10 வார்டு பகுதிகளில் இருந்தும் அந்தந்த பகுதி நகர் மன்ற உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் படி வந்திருந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுதாரர்களிடமிருந்து மனுக்கள் பெறபட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது மேலும் இம்மனுக்கள் அனைத்தும் உரிய துறைசார்ந்த அதிகாரிகள் மூலம் பரிசீலனை செய்து 30 தினங்களுக்குள் உரிய தீர்வு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply