ஏற்காட்டில் பனிமூட்டம்!கடுங்குளிர்!வெண்மேகங்கள் தரையிறங்கும் காட்சி!

சேலம் ஏற்காட்டில் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர்..ஏதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலையில் காணப்படும் சாலைகள்..வெண்மேகங்கள் தரையிறங்கும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது…

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காணப்படுகிறது.கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.கடுங்குளிர் காரணமாக பெரும்பாளான உள்ளுர் மக்கள், தங்களது வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் காபி தோட்ட தொழில் மற்றும் கட்டிட தொழில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாததால், பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன. வென்மேகக் கூட்டம் தரையில் மோதி செல்லும் காட்சி, சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.எதிரே நடந்து வருபவர்கள் கூட தெரியாத நிலை நிலவி வருகிறது.