தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளைக் கடந்து, தற்போது வரையிலும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த் இவரின் நடிப்பில் இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான படம் கூலி…
இந்த படமானது ரஜினியின் 171வது படமாக வெளியாகியிருந்தது.இப்படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்த முதல் படமாகும். இந்தப் படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிகள் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 74 வயதிலும் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.